தகவல்

வணக்கம்,
கடந்த சில வாரங்களாக நோர்வேயில் பரவிவரும் கொரோனா கிருமியின் தாக்கம்,
எங்களின் நாளாந்த வாழ்கையைப் பாதித்துள்ளது.
இவ்விடயம் சார்ந்து நோர்வே அரசு எடுக்கும் முடிவுகளை மதித்து
நடந்துகொள்ளவேண்டும். சுகாதாரப்பிரிவின் முடிவுகளுக்கு ஒத்தவகையில் எமது
கலைக்கூடமும் சில முடிவுகளை எடுக்கவேண்டிய கடமைக்கு உட்பட்டுள்ளது.
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளின் சுகாதாரப் பாதுகாப்பபைக்
கருத்தில் கொண்டு மறு அறிவித்தல் வரை அனைத்து நிகழ்வுகளையும்
இடைநிறுத்தியுள்ளோம்.

நோய்க்கிருமி தொற்றும் அபாயத்தை தடுப்பதற்காகவே இம்முடிவு
எடுக்கப்பட்டுள்ளது. ஆதலால் தேவையற்ற ஒன்று கூடல்கள், விருந்துபசாரங்களை
தவிர்த்து பிள்ளைகளின் உடல் நலத்தை கருத்தில் கொள்ளவும்.
அன்புடன்
நிர்வாகம்